பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 100 பேர் மீது வழக்குப்பதிவு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒரிஜினல் வீடியோவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இன்னும் நீளமாக இருக்கும் என்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெருசலேத்தின் நிலைப்பாடு குறித்து எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லாததும் வலிதற்றதும் ஆகும் எனவும் அத்தகைய தீர்மானங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள128 நாடுகளில் இலங்கை
வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டுள்ள போதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 03 இலட்சம் வரையில் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சம்ர்பிக்கமையின் காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக கூறினார். இதன் காரணமாக பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விஷேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக
வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக, இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்கை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி அந்த அறிக்கையில், விலத்திக்குளம் காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக
இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இரத்தினபுரி – அம்பிலிப்பிட்டி வீதியின் பதுல்பான பிரதேசத்திலுள்ள கால்வாயில் வீழ்ந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 41 பேர் இரத்திபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும்
பொது மக்களின் நிதியை செலவு செய்யும் போது மட்டுப்பாடுகளைப் பேணி, சிறந்த முகாமைத்துவத்துடன் கருமமாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியள்ளார். பக்கமூன வைத்தியசாலையில் சவச்சாலையொன்றை புதிதாக அமைப்பதற்கு பாரியளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. 35 சடலங்களை ஒரே நேரத்தில் வைப்பதற்கு இங்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலையில் இரண்டு மாதத்துக்கு ஒரு சடலம் கூட
தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத் தவறியமைக்கான விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விளக்கம் கோரியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அத்துடன் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில்
முப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பிரிவுகளுக்கான துப்பாக்கிப் பிரயோக பயிற்சி வழங்கும் மைதானத்தை தனியார் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பயன்படுத்த அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரச வங்கிகள், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் என்பவற்றில் பணி புரியும் பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் போது அவர்களுக்கான பயிற்சிகள் இந்த துப்பாக்கிப் பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதற்காக வேண்டி துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சிகள் தொடர்பான
அன்று தேயிலை உற்பத்தியில் உலக பிரசித்தி பெற்றிருந்த இலங்கை, தற்பொழுது போதைப் பொருள் வியாபாரத்தில் பிரபல்யம் அடைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்பொழுது போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை, களஞ்சியம் என்பவற்றுக்கான சுவர்க்கபுரியாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சதொச லொறிகளிலும் கூட ஹேரோயின் எடுத்துச் செல்லப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது கொள்கலன்கள், லொறிகளில் தான் போதைப் பொருள் பிடிபடுகின்றது. இவ்வாறு பிடிபடும் போதைப் பொருட்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பது கேள்விக் குறியாகவே