பொது நிதி குறித்து அவதானம்! “காபட்” கலாசாரம் மஹிந்த அரசாங்கத்தினுடையது-சிறிசேன

398 0

பொது மக்களின் நிதியை செலவு செய்யும் போது மட்டுப்பாடுகளைப் பேணி, சிறந்த முகாமைத்துவத்துடன் கருமமாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியள்ளார்.

பக்கமூன வைத்தியசாலையில் சவச்சாலையொன்றை புதிதாக அமைப்பதற்கு பாரியளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. 35 சடலங்களை ஒரே நேரத்தில் வைப்பதற்கு இங்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலையில் இரண்டு மாதத்துக்கு ஒரு சடலம் கூட சவச்சாலைக்கு வராத நிலையில் 35 சடலங்களை ஒரே நேரத்தில் வைப்பதற்கான ஏற்பாடு தேவையற்ற ஒன்றாகும். இது மக்களின் பணம்.

அதேபோன்றுதான், சகல பாதைகளும் “காபட்” இடப்பட வேண்டியதில்லை. சில பாதைகளுக்கு “தார்” இடுவது மாத்திரம் போதுமானது.  இந்த காபட் கலாசாரத்தை கடந்த மஹிந்த அரசாங்கத்தில் உள்ளவர்களே அறிமுகம் செய்தனர் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment