தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத் தவறியமைக்கான விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விளக்கம் கோரியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில் நேற்று காலை இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

