முப்படையினரின் துப்பாக்கிப் பயிற்சி மைதானத்தில் தனியாருக்கும் அனுமதி

209 0

முப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பிரிவுகளுக்கான துப்பாக்கிப் பிரயோக பயிற்சி வழங்கும் மைதானத்தை தனியார் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பயன்படுத்த அனுமதி வழங்க  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரச வங்கிகள், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் என்பவற்றில் பணி புரியும் பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் போது அவர்களுக்கான பயிற்சிகள் இந்த துப்பாக்கிப் பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காக வேண்டி துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இராணுவ பயிற்சிகள் தொடர்பான சட்டத்தை திருத்தியமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment