நீர்வீழ்ச்சிகளை அண்மிக்க வேண்டாம்! நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

Posted by - October 29, 2017

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகளை அண்மிக்கவோ நீராடவோ வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழையினால் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சி பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இம்மாவட்டத்தில் குறிப்பாக சிவனொலிபாத மலை வீதியில் உல்லாச பயணிகளை கவரும் கவர்ச்சியான பல நீர் வீழ்ச்சிகள் காணப்ப டுகின்றன. ஆனால் இப்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இவற்றில் நீர் அதிகரித்து நீரோட்டமும் வேகமடைந்துள்ளது. அத்துடன் நீர் வீழ்ச்சிப்பகுதியிலும் அண்மித்த பள்ளத்தாக்கான

ஐ.நாவின் நிலைப்பாடு தான் என்ன? -நிலாந்தன்

Posted by - October 29, 2017

“ நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பலி!

Posted by - October 29, 2017

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது,  வீரகெடிய – கல்போத்தயாய பிரதேசத்தினை சேர்ந்த  65 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்

Posted by - October 29, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து பிரதேச சபைகளை உருவாக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல கட்சியொன்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் தேர்தலை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் தாமதமடையலாம் எனவும் கூறப்படுகின்றது. கல்முனை மாநகர சபையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை சாய்ந்தமருது பிரதேச சபை எனப் பெயரிடுவதற்கு, இதற்கு முன்னர் பிரதமருக்கும் அப்பிரதேச

மீண்டும் மாயமான்(கள்) – ஜுட் பிரகாஷ்

Posted by - October 29, 2017

எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை அரசையும் தமிழ் இயக்கங்களையும்  இணக்கத்திற்கு கொண்டு வர இந்தியா பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த கால கட்டம்.  இந்தப் பின்னனியில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினர் “மாயமான்” எனும் தெருக்கூத்தை அரங்கேற்றினார்கள். பின்னேரங்களிலும் இரவுகளிலும் யாழ்ப்பாணம் எங்கும் ஊர் சந்திகளில் அரங்கேறிய “மாயமான்” தெருக்கூத்தில் வரும் பாடல்களில் ஒன்று, இன்று மீண்டும் ஒரு தீர்வுத்திட்டம்

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

Posted by - October 29, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் எதிர்வரும் 01 ஆம் திகதி புதன்கிழமை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர். புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொள்ளவுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதி

அதிவேக பாதையில் பயணித்த பஸ்ஸி்ல் இன்று காலை தீ

Posted by - October 29, 2017

தெற்கு அதிவேக பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. கடுவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே கஹதுடுவ எனும் இடத்தில் இவ்வாறு தீப்பற்றியுள்ளது. தீயணைப்புப் பிரிவினரால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும், தீக்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் பிற்போடப்படுவதற்கு ஸ்ரீ ல.சு.க. காரணம் அல்ல- மஹிந்த

Posted by - October 29, 2017

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் காரணமல்லவெனவும், சில கட்சிகளின் தயார் நிலையற்ற நிலைமையே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை முகம்கொடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. ஏனைய சிலரே பழைய முறையில் தேர்தலை நடாத்த முயற்சித்து வருகின்றனர். இதற்காகவே தேர்தல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்

மட்டக்களப்பில் இரு சமூகங்களிடையே முறுகல், பொலிஸார் குவிப்பு (Photos)

Posted by - October 29, 2017

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பிரதேசம் பதற்றமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலையத்திற்காக அடிக்கல் நாட்டிய இடத்தில் முஸ்லிம்கள் முச்சக்கரவண்டிகளை நிறுத்தியதை அடுத்து, இரு

ஸ்ரீபாத பிரதேசம் சிறுபான்மையினரிடம் செல்வதற்கு எதிராக நடவடிக்கை

Posted by - October 29, 2017

அம்பகமுவ பிரதேச சபையை மஸ்கெலிய, நோர்ட்வுட் மற்றும் அம்பகமுவ என மூன்றாக பிரிப்பதனால், ஸ்ரீ பாத புனிதப் பிரதேசம் பெரும்பான்மை தமிழர்கள் உள்ள மஸ்கெலிய தொகுதிக்கு செல்வதாகவும் இதற்கெதிராக மூன்று மகாநாயக்கர் பீடங்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கண்டி முற்போக்கு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஹெலபிரியனந்தராஜ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அம்பகமுவ பிரதேசத்திலுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லிணக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான பிரதேச சபை பிரிவாக்கத்தினால்