தொடர்கிறது யாழ் – பல்கலைக் கழக சமூகத்தின் நிர்வாக முடக்கல் போராட்டம்

Posted by - October 31, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. 

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை!

Posted by - October 31, 2017

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி மத்திய மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படும் சமூக நற்பணி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் சமூக நலன்புரி சேவைகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள்

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2017

 கடவத்த – பேருந்து தரிப்பித்திற்கு அருகில் இருந்து போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைர் செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து எப்பல் ரக போதை மாத்திரைகள் 100 கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த 30 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். நகரப் பகுதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது!

Posted by - October 31, 2017

யாழ். நகரப் பகுதியில் உள்ள கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்றிரவு    யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை

Posted by - October 31, 2017

முன்னாள் மீன்பிடி துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன உள்ளிட்ட 6 பேருக்கும் எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களம் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஒருகோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணையின் போதே இந்த

அகதிகள் வழக்கு தாக்கல்

Posted by - October 31, 2017

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியின் மானஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் உள்ளிட்டவர்கள், தங்களது முகாம் மூடப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர். பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படுகிறது. அங்குள்ள 800 ஏதிலிகள் வரையில் நவுறு தீவிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்கு எதிராக குறித்த அகதிகள் சார்பில் சட்டத்தரணிகளிலா சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த முகாம் மூடப்படுவதானது, அகதிகளின் உரிமைகளை கடுமையாக மீறும் வகையில் அமைந்திருப்பதாக

வவுனியாவில் 25 கிலோ யானை தந்தங்கள் கைப்பற்றல்

Posted by - October 31, 2017

வவுனியாவில் 25 கிலோகிராம் நிறைக் கொண்ட 3 யானைத் தந்தங்களுடன் இரண்டு பேர் கைதாகியுள்ளனார். வவுனியா பூவரசங்குளம் மற்றும் குருமன்காடு பகுதியில் வைத்து அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரண்டு பேரும் 48 மற்றும் 45 வயதுகளைக் கொண்டவர்கள். இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வாந்தி  விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Posted by - October 31, 2017

உணவு உண்ணாமையால் வாந்தி எடுத்ததை வைத்து கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி பாடசாலை மாணவி ஒருவர் விலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி காலை உணவு உண்ணாததன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த பாடசாலையின் அதிபர் அவர் கருவுற்றிருப்பதாக கூறி பாடசாலையில் இருந்து நீக்கி இருந்தார். இதுதொடர்பில் அந்த