வாந்தி  விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

2636 0
உணவு உண்ணாமையால் வாந்தி எடுத்ததை வைத்து கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி பாடசாலை மாணவி ஒருவர் விலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
குறித்த மாணவி காலை உணவு உண்ணாததன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த பாடசாலையின் அதிபர் அவர் கருவுற்றிருப்பதாக கூறி பாடசாலையில் இருந்து நீக்கி இருந்தார்.
இதுதொடர்பில் அந்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டத் தரப்பினரிடம் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
அதேநேரம் குறித்த அதிபரை பதவி நீக்க ஏற்கனவே கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.