வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட நடைமுற பிற்போடப்பட்டுள்ளது
வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடுவதை நடைமுறைப்படுப்படுத்துவது பிற்போடப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த தண்டப் பணம் அறவிடல் இன்று முதல் நடைமுறை கொண்டுவரப்படவிருந்தது. எனினும், அது தொடர்பான ஆவணங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி தற்போதுவரை கிடைக்கவில்லை. எனவே, தண்டப்பணம் அறவிடுவதை நடைமுறைக்கு கொண்டுவருவது தாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைத் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

