அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருந்தாளர்கள் இன்று மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பதவி உயர்வு, மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்தாளர்கள் காலை 8மணி முதல் மாலை 8மணிவரை நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலை மருந்தாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் தூர பகுதிகளில் இருந்து வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

