மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த மாகாணங்களில் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பிதேசம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

