வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடுவதை நடைமுறைப்படுப்படுத்துவது பிற்போடப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த தண்டப் பணம் அறவிடல் இன்று முதல் நடைமுறை கொண்டுவரப்படவிருந்தது.
எனினும், அது தொடர்பான ஆவணங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி தற்போதுவரை கிடைக்கவில்லை.
எனவே, தண்டப்பணம் அறவிடுவதை நடைமுறைக்கு கொண்டுவருவது தாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைத் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், தொடருந்து பாதை ஊடாக பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் முதலான குற்றங்கள் தொடர்பில் இந்த தண்டப் பணத்தை அறிவிட அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
எனினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடவேண்டியுள்ளதால், அது தொடர்பான ஆவணத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

