திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் நேற்று மாலை (31) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் சேனையூர்,மாவடிச்சேனை பகுதியைச்சேர்ந்த துறைநாயகம் தசீதன் (17வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிச்சேனையிலிருந்து லங்காபட்டினம் வீதியின் ஊடாக தனது அக்காவை ஏற்றிக்கொண்டு பிறந்தநாள் வீடொன்றுக்கு சென்ற வேளை உழவு இயந்திரத்தில் மோதியதினால் அக்கா மற்றும் தம்பி படுகாயமடைந்த நிலையில் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.
இதேவேளை அக்கா மற்றும் தம்பிக்கு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

