முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலாய 2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம் நேற்று பாடசாலையில் சிறப்புற இடம்பெற்றது
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து . ரவிகரன் பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து . ரவிகரன் அவர்கள் பாடசாலையின் பின்புறம் உள்ள மதில் கட்டுவதற்காக மாகாண சபை நிதியிலிருந்து ரூபாய் 100,000/= நிதியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



