அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு நேற்றைய விவாதத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என சபாநாயகர் சபைக்கு அறிவித்ததன் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவாதத்தின் மூன்றாவது தினமான இன்று, கட்சித் தலைவர்கள் அறிக்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இன்றைய தினம் இரவு 8 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்

