ஆண் – பெண் சமநிலை – 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை

Posted by - November 3, 2017

ஆண் – பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார பேரவையின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 144 நாடுகளில் பெண் மற்றும் ஆண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள், கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களின் கீழ் 2006ம் ஆண்டு முதல் புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டன. இவற்றின் அடிப்படையில் ஆண் – பெண் சமத்துவநிலையில் மிகப்பெரிய இடைவெளிகள் இருப்பதாகவும், இவை முழுமையாக தீர்க்கப்படுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டலோனிய பிராந்திய முன்னாள் அமைச்சர்கள் சிறையில்

Posted by - November 3, 2017

கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் அமைச்சர்கள் எண்மர் ஸ்பானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரித்து தனிநாடாக அறிவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக அவர்கள் கைதாகியுள்ளனர்.   ஸ்பெயினின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக இருந்த கட்டலோனியாவை, தனிநாடாக மாற்றுவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பில் அனுமதிக்கப்பட்டது. எனினும் இந்த கருத்துக் கணிப்பை ஸ்பெயின் நீதிமன்றம் தடைசெய்ததுடன்,பிந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளை வழிநடத்திய அந்த பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் கார்லெஸ் உள்ளிட்ட 5

பயங்பரவாத்திற்கு எதிராக போரிட மோடி – ட்ரம்ப் உறுதி

Posted by - November 3, 2017

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உறுதி பூண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கீழ்மேன்ஹட்டன் பகுதியில் கடந்த 31ஆம் திகதி பாதசாரிகள் மீது லொரியை ஏற்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சைபோவ் என்ற

மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!-ரணில்

Posted by - November 2, 2017

இலங்கையில் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2017 முதல் 2021ம் ஆண்டுகளுக்கான மனித உரிமை செயற்றிட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களில் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் இருந்தாக சுட்டிக்காட்டினார். தற்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி

Posted by - November 2, 2017

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது! வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் போரினால் பாதிக்கப்பட்டவருக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கு, மானிப்பாயைச் சேர்ந்த நடேசு பிரபாகரன் என்பவர் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சொந்தமாக கராஜ் ஒன்றை அமைப்பதற்கு உதவிசெய்யுமாறு கோரியிருந்ததையடுத்து வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட

புதிய கட்சியை ஆரம்பித்தார் மேர்வின் சில்வா!

Posted by - November 2, 2017

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார். கடந்த காலங்களில், ஊடகம் மற்றும் ஏனைய சில துறையினருடன் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சில நாட்களாக மௌனம் காத்து வந்த அவர், தற்போது புதிய கட்சியொன்றின் மூலம் மீளியங்க முடிவுசெய்துள்ளார். தமது கட்சிக்கு ‘தேசிய ஜனதா பக்சய’ எனப் பெயரிட்டுள்ள அவர், நாரஹேன்பிட்டியில் உள்ள தமது இல்லத்தில் வைத்து இந்தக் கட்சியை

செரிவு குறைவான மதுபானங்களின் விலை குறைவு?

Posted by - November 2, 2017

அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தில் செரிவு குறைவான சில வகை மதுபானங்களின் விலைகள் குறைக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. செரிவு அதிகமான மதுபான வகைகளைின் பயன்பாட்டை குறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் பரவியதையடுத்து மதுபான விற்பனையாளர்கள் செரிவு குறைந்த மதுபானங்களை மீள் விற்பனைக்காக கொள்வனவு செய்வது மற்றும் களஞ்சியப்படுத்துவதை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலவத்துகொடையில் நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 2, 2017

தலவத்துகொடையில் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நகைக் கடையொன்றினுள் திடீரெனப் புகுந்த மர்ம நபர்கள், தம் வசமிருந்த துப்பாக்கிகளைக் காட்டி கடை உரிமையாளரை அச்சுறுத்தினர். எனினும், சுதாகரித்துக்கொண்ட கடை உரிமையாளர், தன் வசமிருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மர்ம நபர்களை எதிர்த்து மல்லுக்கட்டினார். இதையடுத்து, மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால், கடை உரிமையாளர் காயமடைந்தார். காயமடைந்த அவரை அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்

இலங்கை வருகிறது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல்

Posted by - November 2, 2017

பாகிஸ்தானிய கடற்படை கப்பலான சயிப் (PNS- SAIF) நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றது. பாகிஸ்தானின் கடற்படை கப்பலானது இம்மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும். இதன்பொழுது இருதரப்பு கடற்படை வீரர்களும் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில்  ஈடுபடவுள்ளதுடன், இதற்கான வரவேற்பு நிகழ்வு இம்மாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. F22P வகையான பி.என்.எஸ். சயீப் கப்பலானது  சீன

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

Posted by - November 2, 2017

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை நகரங்களில் ஒன்றுகூடி பாற்சோறு சமைத்து பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆராவாரங்களில் ஈடுபட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு மஸ்கெலியா, நோர்வூட், அம்பகமுவ பிரதேச சபைகளாகவும் நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை