ஆண் – பெண் சமநிலை – 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை

30478 65

ஆண் – பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார பேரவையின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 நாடுகளில் பெண் மற்றும் ஆண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள், கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களின் கீழ் 2006ம் ஆண்டு முதல் புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டன.

இவற்றின் அடிப்படையில் ஆண் – பெண் சமத்துவநிலையில் மிகப்பெரிய இடைவெளிகள் இருப்பதாகவும், இவை முழுமையாக தீர்க்கப்படுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment