இலங்கை வருகிறது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல்

430 0

பாகிஸ்தானிய கடற்படை கப்பலான சயிப் (PNS- SAIF) நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றது.

பாகிஸ்தானின் கடற்படை கப்பலானது இம்மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை பொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.

இதன்பொழுது இருதரப்பு கடற்படை வீரர்களும் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில்  ஈடுபடவுள்ளதுடன், இதற்கான வரவேற்பு நிகழ்வு இம்மாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

F22P வகையான பி.என்.எஸ். சயீப் கப்பலானது  சீன பாரம்பரியத்தினை சார்ந்த போர்க்கப்பலாகும். இக்கப்பலானது ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் இயந்திரங்களை தாங்கிய பல்வேறுவிதமான கடற்சார் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment