காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மனித உரிமைகள் விவகாரம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், புலனாய்வு மற்றும் உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் தொடர்பில் அனுபவமிக்கவர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த நிலையில், இது தொடர்பான விண்ணப்பங்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தற்போது கிடைத்துவருவதாக

