மானஸ் அகதிகள் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பு

Posted by - November 7, 2017

மானஸ் அகதிகள் முகாம் தொடர்பிலான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பென் லோமாய் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த முகாம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும்,

மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு ஒத்துழைக்கும் அமெரிக்கா

Posted by - November 7, 2017

மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசத்துடன், நேற்று மாலை இலங்கை – அமெரிக்க இரண்டாம் சுற்று ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார். அதன்பின்னரான கூட்டு அறிவிப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜெனீவா – மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க -இலங்கை கூட்டு அனுசரணையுடனான பிரேரணையின் பரிந்துரைகளை

தீர்வில்லையேல் போராட்டம் தொடரும் – மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம்

Posted by - November 7, 2017

அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடாரம் அமைத்து நேற்று மாலை அவர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என

புத்தளம் – மதுரங்குளி விபத்து – விசேட மருத்துவர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 7, 2017

புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவந்த வேளையில், அந்த மருத்துவமனையின் சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் மருத்துவமனையில் இல்லாமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்றதை அடுத்து காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற

பண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்

Posted by - November 7, 2017

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனைக் குறிப்பிட்டார். சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் சென்றுள்ளதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனிடையே இந்த முறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மகிந்த

யாழ்ப்பாணத்தில் போலி நாணய நாள்களை அச்சிட்ட கணவன்-மனைவி கைது

Posted by - November 7, 2017

போலி நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை, நேற்றிரவு சுற்றிவளை காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாணயத் தாள்களை அச்சிட்ட 2 அச்சி இயந்திரங்கள், ஸ்கோனர் இயந்திரம், மடிக்கணினி மற்றும் 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் 400, மற்றும் 1000 ரூபா நாணயத்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2017

5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. ஈகைச்சுடர் மற்றும் தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்;வில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் துணைவியார் அவர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மற்றைய ஐந்து மாவீரர்களுக்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் செயற்பாட்டாளர்களும் மாலை அணிவித்து சுடர்வணக்கமும் செய்தனர். பின்

யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து – 5 பேர் பலி, 44 பேர் காயம்

Posted by - November 6, 2017

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தல் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இன்மை காரணமாக 8 பேர் சிலாபம் மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் மூன்று பேரது நிலமை தொடர்ந்தும் கவலைக்கிடமானதாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள்

நியாயமான சந்தேகம் – பி.மாணிக்கவாசகம்

Posted by - November 6, 2017

இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்கதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, அது வழி வகுக்குமா என்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.

கருணாநிதி, பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - November 6, 2017

தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக அரசை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவது, நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை ஆகியன குறித்து ஆலோசனை நடத்த நேரம் கேட்ட திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. மக்கள்