தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted by - November 7, 2017

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித்

நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு

Posted by - November 7, 2017

கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறத. தற்பொழுது பல் வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பெட்றோல் நெருக்கடி நிலையை கண்டறிய அமைச்சரவை உபகுழு

Posted by - November 7, 2017

பெட்றோல் நெருக்கடி நிலை முகாமைத்துவத்திற்காக அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்த குழுவின் மூலம் பெற்றோல்நெருக்கடிநிலைக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்

Posted by - November 7, 2017

தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். சர்வதேச மன்றங்களில் தென்கொரியாவுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சகோதர நகரமொன்றுடன் இணைப்பை ஏற்படுத்த சியோல் விரும்புவதாகவும் தெரிவித்தார். நகரங்களுக்கிடையிலான இத்தகைய இணைப்பு நகர அபிவிருத்தி மூலோபாயங்களை கற்றுக்கொள்ள இருதரப்புக்கும் உதவும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை மற்றும் தென்கொரிய குடியரசுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 ஆண்டுகள் நிறைவடைவதை

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

Posted by - November 7, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எயர் போர்ஸ் வன் என்ற வானூர்தி ஊடாக தென்கொரிய தலைநகரமான சியோலுக்கு ளுநழரட அருகில் உள்ள ஒசான் வானூர்தி தளத்தை அவர் சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை பரிசோதனை விவகாரத்தால் பெரும் முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இதன்போது அவர், தென்கொரியாவுடன் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில்

இந்தியாவில் இடம்பெற்ற ஊழல் வழக்கின் தீர்ப்பு

Posted by - November 7, 2017

இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக கருதப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்க மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கணிமொழி, முன்னாள் அமைச்சர் ஏ. ராஜா போன்றவர்கள் தொடர்பு பட்டுள்ளனர். வழக்கின் விசாரணைகளை விசேட நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. இந்தநிலையில் அதன் தீர்ப்பை வழங்கும் திகதி இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய

யாழ்ப்பாணத்தில்  80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை 

Posted by - November 7, 2017

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைபடுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பிரதேசத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் 80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என ஊர்காவற்றுறை

சைட்டத்திற்கு எதிரான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - November 7, 2017

அரசாங்க மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பெற்றோர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை கம்பஹா நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் மருத்துவபீட

வேட்பாளர் தெரிவு பணிகள் இடம்பெறுகின்றன. – ஐக்கிய தேசியக் கட்சி 

Posted by - November 7, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றைய தினம் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இதற்கமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் புத்தளம்  மாவட்டங்களின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது. நாளைய தினம், பதுளை, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அமைப்பாளர்களுடான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தில் இருந்து தப்பிய 5 பேர் மீள இணைவு

Posted by - November 7, 2017

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர்களை சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிமுதல்  கடந்த 6 ஆம் திகதிவரை இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.