இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்

6056 0

தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

சர்வதேச மன்றங்களில் தென்கொரியாவுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு அவர்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சகோதர நகரமொன்றுடன் இணைப்பை
ஏற்படுத்த சியோல் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நகரங்களுக்கிடையிலான இத்தகைய இணைப்பு நகர அபிவிருத்தி மூலோபாயங்களை கற்றுக்கொள்ள
இருதரப்புக்கும் உதவும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை மற்றும் தென்கொரிய குடியரசுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 ஆண்டுகள் நிறைவடைவதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த 40 ஆண்டுகளில் எவ்வாறான பலமான உறவுகளை கட்டியெழுப்பமுடியும் என்பது குறித்து சிந்திப்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.

சியோல் நகரத்தின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான
கொரிய தூதுவர் சாங் வொன் சாம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a comment