வேட்பாளர் தெரிவு பணிகள் இடம்பெறுகின்றன. – ஐக்கிய தேசியக் கட்சி 

430 0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றைய தினம் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

இதற்கமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் புத்தளம்  மாவட்டங்களின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

நாளைய தினம், பதுளை, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அமைப்பாளர்களுடான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment