அரசாங்க மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.
அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பெற்றோர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை கம்பஹா நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் மருத்துவபீட மாணவர்கள், மேலதிக வகுப்புகளில் கல்விp கற்கும் மாணவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில், கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்திற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.