இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - November 8, 2017

இன்று (8) நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடரூந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வேத பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடரூந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொடரூந்து நிலை பொறுப்பதிகள் ஆகியோரே இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கொள்ளையர் ஒருவர் கைது 

Posted by - November 8, 2017

ஆயுத முனையில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட பிரபலமான குற்றவாளி ஒருவர் அவிசாவளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மீரிகம வங்கிக் கொள்ளை, கண்டியில் சிற்றூர்ந்து ஒன்றை கடத்தியதுடன் தங்க ஆபரணங்ளை அபகரித்தமை, தொம்பே பகுதியில் உந்துருளி ஒன்றை கடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக காலி, கேகாலை ஆகிய மேல் நீதிமன்றங்களிலும், அத்தனகலை மற்றும் ருவன்வெல்ல ஆகிய நீதவான்

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை வான்போக்குவரத்து பிரிவு விஜயம்

Posted by - November 8, 2017

இலங்கை விமானப்படையின் வருடாந்த மாற்றுதல் நடவடிக்கைகளுக்காக வான் போக்குவரத்து பிரிவினர் மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்றனர். கடந்த 4ஆம் திகதி புறப்பட்டுச்சென்ற இக் குழுவில் இலங்கை விமானப்படையின் பல்வேறு கிளைகளையும் வர்த்தகங்களையும் சேர்ந்த 110 பேர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக சென்ற இலங்கை விமானப்படையின் வான் போக்குவரத்து பிரிவின் இப்பிரிவின் 94 பேர் கொண்ட மூன்றாவது குழுவினர் தமது 12 மாத கால பணிகளை நிறைவு செய்தபின்னர்

பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - November 8, 2017

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்ட மூன்றாம் இலக்க தொடர் வீட்டு பகுதியிலிருந்து

தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே!

Posted by - November 8, 2017

கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார்.

தலவாக்கலையில் விபத்து 11 பேர் காயம்

Posted by - November 8, 2017

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது அட்டன் வெலிஓயாவிலிருந்து தங்கக்கலை நோக்கி பயணித்த வேளையிலேயே தாவாக்கலை தோட்டத்தேயிலை தொழிற்சாலைக்கருகிலுள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது இதில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையிலும் 4 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிலும் எஞ்சிய 5 பேர்

நிதி மோசடி, இலஞ்ச ஊழல் குறித்து விசா­ரிக்க விசேட மேல் ­நீ­தி­மன்றம்

Posted by - November 8, 2017

ஊழல் மோச­டிகள் மற்றும் நிதி மோச­டிக்­ குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­காக விசேட மேல்­நீ­தி­மன்றம் அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கியுள்­ளது. மூன்று நீதி­ப­தி­களைக் கொண்ட மூன்று தீர்ப்­பா­யங்கள் இதற்­கி­ணங்க அமைக்­கப்­ப­ட­வுள்ன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது    விசேட  மேல் நீதி­மன்­றங்­களை  அமைப்­ப­தற்­காக   பிரே­ர­ணை­யினை  நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள  முன்­வைத்தார்.  இந்த   பிரே­ரணை  தொடர்பில்  ஆரா­யப்­பட்­ட­துடன் இதற்கு  அமைச்­ச­ரவை  அங்­கீ­கா­ரமும் வழங்­கி­யது. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற நிதி மோச­டிகள், மற்றும்

தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன்-அர்­ஜூன ரண­துங்க

Posted by - November 8, 2017

எவர் என்ன கூறி­னாலும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை  தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த பிரச்­சி­னையை தீர்க்க எனக்கு இட­ம­ளி­யுங்கள் என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க சபையில் தெரி­வித்தார். இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும்

மாத்தளையில் விபத்து – இளைஞன் பலி

Posted by - November 8, 2017

மாத்தளை – அக்குரண பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். கலேவெலயில் இருந்து கண்டி பகுதிக்கு மங்கள நிகழ்வொன்றுக்குச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் பலியானவர் மாத்தளை – யடவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் காயமடைந்தவர்களில் சிறுகுழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் அடங்குவதாக அலவத்தகொட காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்த பாடசாலை மட்டங்களில் வேலைத்திட்டம்

Posted by - November 8, 2017

பாடசாலை சிறுவர்களிடம் டெங்கு நோய் பரவரை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சு பாடசாலைகள் மட்டத்தில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 10ஆம் 11ஆம் தினங்களில் பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடத்தின் புதிய தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், டிசம்பர் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.