டெங்கு நோயை கட்டுப்படுத்த பாடசாலை மட்டங்களில் வேலைத்திட்டம்

17196 0

பாடசாலை சிறுவர்களிடம் டெங்கு நோய் பரவரை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சு பாடசாலைகள் மட்டத்தில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 10ஆம் 11ஆம் தினங்களில் பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வருடத்தின் புதிய தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், டிசம்பர் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment