கொள்ளையர் ஒருவர் கைது 

310 0

ஆயுத முனையில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட பிரபலமான குற்றவாளி ஒருவர் அவிசாவளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் மீரிகம வங்கிக் கொள்ளை, கண்டியில் சிற்றூர்ந்து ஒன்றை கடத்தியதுடன் தங்க ஆபரணங்ளை அபகரித்தமை, தொம்பே பகுதியில் உந்துருளி ஒன்றை கடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு எதிராக காலி, கேகாலை ஆகிய மேல் நீதிமன்றங்களிலும், அத்தனகலை மற்றும் ருவன்வெல்ல ஆகிய நீதவான் நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.

Leave a comment