நிதி மோசடி, இலஞ்ச ஊழல் குறித்து விசா­ரிக்க விசேட மேல் ­நீ­தி­மன்றம்

294 0

ஊழல் மோச­டிகள் மற்றும் நிதி மோச­டிக்­ குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­காக விசேட மேல்­நீ­தி­மன்றம் அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கியுள்­ளது.

மூன்று நீதி­ப­தி­களைக் கொண்ட மூன்று தீர்ப்­பா­யங்கள் இதற்­கி­ணங்க அமைக்­கப்­ப­ட­வுள்ன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது    விசேட  மேல் நீதி­மன்­றங்­களை  அமைப்­ப­தற்­காக   பிரே­ர­ணை­யினை  நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள  முன்­வைத்தார்.  இந்த   பிரே­ரணை  தொடர்பில்  ஆரா­யப்­பட்­ட­துடன் இதற்கு  அமைச்­ச­ரவை  அங்­கீ­கா­ரமும் வழங்­கி­யது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற நிதி மோச­டிகள், மற்றும் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்­லை­யென்று  பெரும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்டு வந்த நிலையில் அந்த விட­யங்கள் குறித்து விசா­ரிக்க  விசேட மேல்­நீ­தி­மன்­றங்கள்  அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை  தற்­போது அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதற்­கான பிரே­ர­ணை­யினை நேற்று அமைச்­ச­ர­வையில் நீதி அமைச்சர் தலாதா அத்­துக்­கோ­ரள சமர்ப்­பித்­த­துடன் இதற்கு சகல அமைச்­சர்­களும் ஆத­ரவு வழங்­கினர்.  நிதி மோசடி குற்­றச்­சாட்­டுக்கள்  மற்றும் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள்,  பொது சொத்­துக்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை, பயங்­க­ர­வா­தத்­திற்கு பணம் வழங்க முற்­பட்­டமை,  பணத்­தினை பதுக்க முற்­பட்­டமை,  நிதி தொடர்பில்  ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட தவ­றினை மேற்­கொண்­டமை உட்­பட  பல்­வேறு விட­யங்கள் குறித்து   துரி­த­மாக விசா­ரணை நடத்­து­வ­தற்­கா­கவே இந்த  விசேட மேல்­நீ­தி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தாக பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது சாதா­ரண மேல் நீதி­மன்­றங்­களில் இடம்­பெற்று வரும் நிதி மோச­டிக்­குற்­றச்­சாட்­டுக்கள், மற்றும் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான வழங்­கு­களை பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர் ஆகி­யோரின் கோரிக்­கைக்கு இணங்க விசேட மேல் நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்ற  முடியும் என்றும்  இந்த விசேட நீதி­மன்­றங்­களை அமைப்­ப­தற்­கான சட்­டத்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­க­வேண்­டு­மென்றும்  நீதி அமைச்சர் தலா அத்­துக்­கோ­ர­ளை­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணையில் கோரப்­பட்­டி­ருந்­தது.  இத்தகைய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விசேட மேல்  நீதிமன்றங்களினால் அளிக்கப்படும் தீர்ப்புக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment