நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு..

Posted by - November 9, 2017

மதுமீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் முதல் அமுல் மலையக வீடமைப்பு திட்டத்துக்கு 2,000 மில்லியன் நிதி வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டத்துக்கு (3000 மில்லியன்) மேலதிக நிதி யாழ். பல்கலை. வவுனியா வளாக நூலகம் (அதிநவீன தொ.நுட்பம்) அபிவிருத்தி பாடசாலை கல்விக்குள் அதிநவீன தொழில்நுட்பம் (மரபணு, ரொபோ டெக், நெனோ) மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு அரசாங்கத்தினால் 90 சதவீத சலுகை. முச்சக்கர வண்டிகளுக்கு அதிகார சபை சாரதிகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயற்சி. இறக்குமதி

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட மிதிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன

Posted by - November 9, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில்நேற்று முன்தினம் (7) 5 0 மிதிவெடிகள் மீட்கப்பட்டன இந்த மிதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று வெடிக்க செய்து அழிக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் பாக்கியநாதன் மரியமலர் என்பவருடைய காணியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு முன்னாள் கொட்டில் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டும் போது மிதிவெடிகள் இருப்பதை அவதானித்ததை தொடர்ந்து இந்த தகவலை இராணுவத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

Posted by - November 9, 2017

இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று(9) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது இதில் எழிலன் உள்ளிட்ட ஜவர் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்துள்ள நிலையில் அதன் எழுத்துமூலமான அறிக்கை இன்று நீதிமன்றில் சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் கையளித்துள்ளார். அத்தோடு எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா  மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்படவுள்ளது அடுத்த கட்டமாக

கூட்டமைப்பின் ஐக்கியத்தினை வலுவிழக்கச் செய்வது மக்கள் எமக்களித்த ஆணையினை மீறுவதாகும் – விந்தன் கனகரத்தினம்

Posted by - November 9, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமானது. அது எந்தவகையிலும் பிளவுபட்டுப் போகக்கூடாது என்பதில் நாம் உறுதியாகப் பணியாற்ற வேண்டிய சவால் எம் முன் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். புங்குடுதீடு மக்கள் ஒன்றியத்தின் அழைப்பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த சமயம், புலம்பெ​​​​​​​​​​​​​​​​யர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மூவர் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்கள்

Posted by - November 9, 2017

இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 12 பேர் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று ஆள்கொணர்வு மனு தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 9 பேரின் மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு

2018 பாதீடு உரையை நிதியமைச்சர் ஆரம்பித்துள்ளார்.

Posted by - November 9, 2017

2018ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிதியமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்துகிறார். 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு இதுவாகும். அத்துடன் சுதந்திர இலங்கையின் 71வது பாதீடாகவும், தற்போதைய கூட்டரசாங்கத்தின் 3வது பாதீடாவும் இது அமையவுள்ளது. பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் அதன் யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு கூட்டம் ஒன்று,

கஹவத்தையில் தொடரும் கொலைகள்; அச்சத்தில் பிரதேசவாசிகள்!

Posted by - November 9, 2017

கஹவத்தையில் மற்றொரு ஆணின் சடலம் ஆற்றில் மிதந்தது அப்பகுதியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. குறுகிய காலத்தில் சுமார் பத்து பெண்களின் உடல்கள் கஹவத்தை பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இவை, தொடர் கொலைகளாக இருக்கலாம் என்றும், திட்டமிட்டே இக்கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கஹவத்தை, கொடகெதன கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதிவாசிகளை மேலும் பயத்துக்குள்ளாக்கியுள்ளது. அவசர உதவி இலக்கத்துக்கு வந்த அழைப்பை அடுத்து, கால்வாயில் மிதந்தபடி இருந்த சடலத்தை பொலிஸார் மீட்டனர். தற்போது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவை ஆரம்பம்; கூச்சல், குழப்பத்தையடுத்து வரவு-செலவுத் திட்டம் வாசிப்பு ஆரம்பம்

Posted by - November 9, 2017

வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் இன்று கூடிய முதல் நிமிடம் முதலே பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டு வந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை சற்று முன் ஆரம்பமானது. அப்போது, பெற்றோல் இன்றி துவிச்சக்கரவண்டிகளில் வந்த தம்மை பாராளுமன்றுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து, அவை உறுப்பினர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனினும், நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவுத் திட்டத்தை ஆரம்பித்ததையடுத்து, கூச்சல்கள் ஓய்ந்தன. தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத் திட்ட

வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும் – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 9, 2017

வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான 5ஆம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்