சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவை ஆரம்பம்; கூச்சல், குழப்பத்தையடுத்து வரவு-செலவுத் திட்டம் வாசிப்பு ஆரம்பம்

381 0

வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் இன்று கூடிய முதல் நிமிடம் முதலே பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டு வந்தது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை சற்று முன் ஆரம்பமானது. அப்போது, பெற்றோல் இன்றி துவிச்சக்கரவண்டிகளில் வந்த தம்மை பாராளுமன்றுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, அவை உறுப்பினர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

எனினும், நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவுத் திட்டத்தை ஆரம்பித்ததையடுத்து, கூச்சல்கள் ஓய்ந்தன.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத் திட்ட அறிக்கை அவையில் நிதியமைச்சரால் வாசிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment