பட்ஜெட்டின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பம்

Posted by - November 10, 2017

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெற்று இறுதித் தினத்தன்று மாலை அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அடுத்து, 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 09 ஆம் திகதி வரையில் வரவு செலவுத் திட்ட குழு முறையிலான விவாதம்  நடைபெறும். 9 ஆம் திகதி மாலையில் இறுதி

பொலிஸ் துறையில் பாரிய மாற்றம்- பிரித்தானிய அரசாங்கம் உதவி

Posted by - November 10, 2017

பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியில் அடுத்த வருடம் இலங்கை பொலிஸ் சேவையில் பாரிய பல மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக சர்வதேச பொலிஸ் ஆலோசகரான ஹியுகோ ஒர்வே இந்நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை பொலிஸ் துறையை நவீன மயப்படுத்துவது இவரின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. தகவல் சேகரிப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் பயிற்சியளித்தல் உட்பட பொலிஸ் துறையிலுள்ள பல்வேறு பிரிவுகளும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த செயற்திட்டத்துக்காக

வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட விசேட நீதிமன்றம் தேவையற்றது- சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - November 10, 2017

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றம் நாட்டுக்குத் தேவையற்றதொன்று எனவும் உள்ள நீதிமன்றங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளே தேவையானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். வழக்குகள் தாமதமாவதை தவிர்ப்பதற்கு வேறு நடவடிக்கைகள் முன்மொழிப்பட வேண்டுமே அல்லாமல் புதிதாக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டியதில்லையெனவும், இதனால் சட்டத்துறையில் சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள்!

Posted by - November 10, 2017

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என  தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்

போரில் வெற்றி- சிரிய இராணுவம்

Posted by - November 10, 2017

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற்றிருப்பதாக, சிரிய இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி நகரையும் தாங்கள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிரியாவின் பாலைவனப் பிரதேசமான அல்பு கமால் பிரதேசத்தில், சிரிய இராணுவத்தினர் இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் எந்த பிரதேசங்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை

Posted by - November 10, 2017

ஜேர்மனியில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்தமைக்காக தண்டனை அனுபவித்து வரும் தாதி ஒருவர், 100 பேர் வரையில் அவ்வாறு மரணிக்கச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. ஜேர்மன் விசாரணையாளர்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இரண்டு நோயாளர்களை இவ்வாறு மரணிக்க செய்தமைக்காக, நீல்ஸ் ஹோகெல் என்ற தாதி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கடமையாற்றிய 2 வைத்தியசாலைகளில் 100 பேர் வரையில் அவர் இவ்வாறு கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - November 10, 2017

அம்பலாந்தொட்ட – இடம்தொட்ட பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒரு பிள்ளையின் தாயார் என கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் தாயார் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது, தமது மகள் அந்த அழைப்புக்கு பதில் அளிக்காத நிலையில் அவர் நேரில்

அனைத்து பிரதேசங்களுக்கும் எரிபொருள் விநியோகம்

Posted by - November 10, 2017

இன்று நள்ளிரவாகும் போது நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெற்றோல், நேற்று மாலையில் இருந்து தொடர்ச்சியாக நாடு பூராகவும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இன்றைய தினம் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன்; பெற்றோல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 15 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளுடன்

சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம்

Posted by - November 10, 2017

சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் பொலனறுவை மாவட்ட மாநாடு இன்று ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகிறது. பொலனறுவை ரோயல் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறார்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உடல், உள நலன்களை முன்னேற்றும் வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடத்தப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த பெப்ரவரி மாதம் கண்டி – திகன மாகாண விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பில் விசாரணை

Posted by - November 10, 2017

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகள் அரசியல் நோக்கில் பாடசாலை மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதி இன்றி, இவ்வாறான பேரணிகளில் ஈடுபடுத்துவதாக தகவல்கிடைத்துள்ளது. இதுதொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தநிலையில் அது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.