வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட விசேட நீதிமன்றம் தேவையற்றது- சட்டத்தரணிகள் சங்கம்

5778 21

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றம் நாட்டுக்குத் தேவையற்றதொன்று எனவும் உள்ள நீதிமன்றங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளே தேவையானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா இதனைக் கூறியுள்ளார்.

வழக்குகள் தாமதமாவதை தவிர்ப்பதற்கு வேறு நடவடிக்கைகள் முன்மொழிப்பட வேண்டுமே அல்லாமல் புதிதாக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டியதில்லையெனவும், இதனால் சட்டத்துறையில் சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment