பொலிஸ் துறையில் பாரிய மாற்றம்- பிரித்தானிய அரசாங்கம் உதவி

374 0

பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியில் அடுத்த வருடம் இலங்கை பொலிஸ் சேவையில் பாரிய பல மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக சர்வதேச பொலிஸ் ஆலோசகரான ஹியுகோ ஒர்வே இந்நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை பொலிஸ் துறையை நவீன மயப்படுத்துவது இவரின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் சேகரிப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் பயிற்சியளித்தல் உட்பட பொலிஸ் துறையிலுள்ள பல்வேறு பிரிவுகளும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த செயற்திட்டத்துக்காக பிரித்தானிய அரசாங்கம் 4 பில்லியன் ஸ்டேர்லின் பவுன்களை வழங்க உடன்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment