சிறார்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் பொலனறுவை மாவட்ட மாநாடு இன்று ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகிறது.
பொலனறுவை ரோயல் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சிறார்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உடல், உள நலன்களை முன்னேற்றும் வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த பெப்ரவரி மாதம் கண்டி – திகன மாகாண விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

