நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்.!

Posted by - December 26, 2017

தபால் தொழிற்சங்க முன்னணியானது நாளை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்துக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்வது,  தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரதான நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் போட்டி

Posted by - December 26, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபைகள், 16 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பதுடன் இவற்றுக்கு 14 அரசியல் காட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் வேட்பாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.பீ. ஹிட்டிசேகர தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் தேர்தல் நடைபெற உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களான கண்டி மாநகர சபை, கம்பளை நகர சபை,

“மக்கள் பேரவையே எமது அரசியல் இயக்கம்” – முதல்வர் பரபரப்பு அறிக்கை

Posted by - December 26, 2017

“என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.

“தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - December 26, 2017

கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் ரசிக மல்லவாரச்சி மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கொலைக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசாங்க இரசாயன பரிசோதகருக்கும் கொலை செய்யப்பட யானையின் சதை பகுதியை டீ.என்.ஏ. பரிசோதனைக்காக

பெப்ரவரி 7ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை

Posted by - December 26, 2017

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாகவும், இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதன்போது

“தூய கரங்கள் தூய நகரம்” எனும் கோசத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!

Posted by - December 26, 2017

தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள

சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை-சாகல

Posted by - December 26, 2017

இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகளின் பொருட்களை மீட்க முயற்சித்த 11 பேர் கைது

Posted by - December 26, 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் தங்கங்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சி செய்த 11 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாத்தறை, வெல்லம்பிட்டிய, கொட்டஹேன, மாக்கந்துர, கொட்டவை, கம்பளை, மற்றும் வெளிவேரிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

Posted by - December 26, 2017

பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசி 62 ரூபாவுக்கும், உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட சிவப்பு அரிசி 73 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சம்பாவின் விலை 71 ரூபாவாகவும், நாட்டரசி ஒரு கிலோவின் விலை 82 ரூபாவாகவும்

ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை நல்லிணக்க வாரம்!

Posted by - December 26, 2017

எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.