கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் போட்டி

264 0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபைகள், 16 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பதுடன் இவற்றுக்கு 14 அரசியல் காட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் வேட்பாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.பீ. ஹிட்டிசேகர தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் தேர்தல் நடைபெற உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களான கண்டி மாநகர சபை, கம்பளை நகர சபை, கடுகண்ணாவை நகர சபை, வத்தேகம நகர சபை, பூஜாபிட்டிய பிரதேச சபை, அக்குறணை பிரதேச சபை, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, யடினுவர பிரதேச சபை, மினிப்பே பிரதேச சபை, உடதும்பரை பிரதேச சபை, உடுநுவரை பிரதேச சபை, மெததும்பரை பிரதேச சபை, உடபலாத பிரதேச சபை, குண்டசாலை பிரதேச சபை, பாததும்பறை பிரதேச சபை, கங்க இகல கோரல பிரதேச சபை, பன்வில பிரதேச சபை, பாதஹேவஹெட்ட பிரதேச சபை, தும்பனை, கண்டி ஹதரவட்ட கங்கவட்ட கோரல பிரதேச சபைகள் என்பனவாகும்

இவற்றுக்கு 14 அரசியல் கட்சிகளிலிந்து 104 வேட்பாளர் நியமனப்பத்திரங்களும் 11 சுயேட்சை குழுக்களிருந்து 11 வேட்பாளர் நியமனப்பத்திரங்களும் மொத்தமாக 115 வேட்பாளர் நியமனப்பத்திரங்கள் கண்டி மாவட்ட 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

புதிய தேர்தல் முறைமைக்கமைய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு இடாப்பில் பதியப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு படி 10,97,342 போர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதுடன் கண்டி மாவட்டத்தில் 925 வாக்களிப்பு நிலையங்களும் 368 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment