தேசிய பட்டியல் ஆசனத்தை அருந்தவபாலனுக்கு வழங்க தமிழ் அரசு கட்சி நடவடிக்கை

Posted by - November 13, 2017

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் பதவி விலகி, அவரது இடத்துக்கு அந்தக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் வி.அருந்தவபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது. தமிழ் தேசிய கூட்ம்மைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். தனித்துச் சென்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கையை தமிழ் அரசுக் கட்சி முன்னெடுத்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளநிலையில் தென்மராட்சித் தொகுதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரை நியமித்து அந்தத் தொகுதி மக்களின் விருப்பை நிறைவேற்ற வேண்டுமென கட்சியின் உயர் மட்டத்துக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த

தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் – மகிந்த

Posted by - November 13, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார். தமக்கு ரணிலுடனோ, மைத்திரிபால சிறிசேன உடனோ தொடர்பு இல்லை எனவும், தாம் மக்களுடன் மாத்திரமே தொடர்பில் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்!-விஐயகலா

Posted by - November 13, 2017

தமிழ் கட்சிகள் பிளவுபடாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா போல் அரசிற்கு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என யாழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.மேலும் வடக்கு கிழக்கு பகுதியில் சிறு சிறு கட்சிகள் உருவாக்குவதை நிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றிபெறும் – அஜித்

Posted by - November 13, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாவிடினும் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவதில் நிச்சயமான நம்பிக்கை இருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எந்த கூட்டிணைவையும் வைத்துக்கொள்ளாத அதேவேளை, இலங்கையின் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி, யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் ஏமாற்றப்படும் போதோ அவா்கள் அரசியலை வெறுக்கின்றனா்-சந்திகுமாா்

Posted by - November 13, 2017

மக்கள் தாங்கள் தெரிவு    செய்யும் பிரதிநிதிகளால் ஏமாற்றப்படும் போதே அவா்கள் அரசியலை வெறுக்கின்றனர்.  ஒருவரை தங்களின்  பிரதிநிதியாக மக்கள் தெரிவு செய்யும் போது அந்த பிரதிநிதியிடம் இருந்து  உச்சபட்ச சேவையை எதிர்பார்ப்பார்கள்  ஆனால் அது இடம்பெறாது போகும் போதே மக்களுக்கு அரசியலில் வெறுப்பு ஏற்படுகிறது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.  கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவா் இவ்வாறு

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி

Posted by - November 13, 2017

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.இவ் விடயம் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள பலராலும் பல வாக்குறுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவை பொய்த்துப்போன நிலையில், அரசுக்குதொடர்சியான அழுத்தங்களை கொடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு பேரணி, யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில்

யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் யாழ். வீதியை திரும்பிப் பார்ப்பாரா?

Posted by - November 13, 2017

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும்  இணைக்கும் யாழ். வீதி நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ். வீதி சீரமைக்கப்படாதநிலையில் உள்ளதுடன் குப்பை கூழங்களினாலும்  விலங்குகளின் கழிவுகளினாலும் நிரம்பி வழிகின்றது. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ் வீதியை பயன்படுத்தும் மக்கள் அசெளரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்பில் அப் பகுதி

சவுக்கடி இரட்டை படுகொலை : நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - November 13, 2017

மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் இரட்டை கொலைக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை 9 மணியலவில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 18ம் திகதி சவுக்டியில் தாயும் மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு சிலர் மும்முரமாக செயற்படுகின்றமையை கண்டித்து குறித்த இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட புலனாய்வு பிரிவினரும் கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள் எனவும் தற்போது அவர்கள் வெளியில் வருவதற்கு சிலர் உதவுவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவீந்திரநாத் தாகூர் தங்கி இருந்த லண்டன் வீட்டை வாங்க மம்தா பானர்ஜி விருப்பம் – நினைவு இல்லம் அமைக்க திட்டம்

Posted by - November 13, 2017

லண்டனில் ரவீந்திரநாத் தாகூர் தங்கி இருந்த வீட்டை வாங்கி நினைவு இல்லம் அமைக்க மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

காங்கோ: எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி

Posted by - November 13, 2017

காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.