இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் பதவி விலகி, அவரது இடத்துக்கு அந்தக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் வி.அருந்தவபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது.தமிழ் தேசிய கூட்ம்மைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். தனித்துச் சென்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கையை தமிழ் அரசுக் கட்சி முன்னெடுத்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளநிலையில் தென்மராட்சித் தொகுதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரை நியமித்து அந்தத் தொகுதி மக்களின் விருப்பை நிறைவேற்ற வேண்டுமென கட்சியின் உயர் மட்டத்துக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜா சிங்கத்திடம் இந்த மாற்றம் குறித்த உத்தியோக பணி வழங்கப்பட்டுள்ளது.

