ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாவிடினும் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவதில் நிச்சயமான நம்பிக்கை இருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.ஜாஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எந்த கூட்டிணைவையும் வைத்துக்கொள்ளாத அதேவேளை, இலங்கையின் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி, யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

