ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் பெற்றோல் பாரவூர்தியில் இடம்பெற்று வந்துள்ள மோசடி
பெற்றோலில் மண்ணெண்ணை கலந்து இடம்பெற்று வந்துள்ள மோசடியை காவல்துறை அதிரப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். கலவெல – தெவஹூவ – மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் பெற்றோல் பாரவூர்தியில் பெற்றோலை கலந்த மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பாரவூர்தியின் சாரதி ,உதவியாளர் மற்றும் மண்ணெண்ணையை ஏற்றிவந்த மேலும் ஒரு பாரவூர்தியின் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பெற்றோல் பாரவூர்தி, திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.

