நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசு கூடுதல் கவனம் – ருவன்

334 0

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏற்றவகையிலேயே முன்மொழிவுகள் வரவுசெலவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மல்வான பிரதேசத்தில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நன்கு அறிவர். யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமகால அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன சுட்டிக்காட்டினார்.

எவருக்கும் எத்தகைய தடையையும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப்போவதில்லை. கல்விக்குப்போன்றே இளைஞர்சேவைகள் மேம்பாட்டுக்கான நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. ஆழமாக ஆராய்ந்தே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் வழமைபோன்றே வரவுசெலவுத்திட்டத்தை விமர்சிக்கின்றனர். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்கள் விமர்சனங்களையே மேற்கொள்கின்றனர். இவை காத்திரமான விமர்சனங்கள் அல்ல என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment