கொஸ்கொட துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

353 0

கொஸ்கொட – குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியால் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் நேற்றிரவு கட்டுவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

22 வயதாக முக்கிய சந்தேக நபர் கொஸ்கொட, நானதொட்ட பிரசேத்தைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்றைய தினம் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a comment