விஜயகலாவின் விசித்திர பேச்சு! சம்பந்தனுடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிடுகிறார்!

Posted by - November 13, 2017

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்காது 2020ஆம் ஆண்டுக்குள் தீர்வினைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரவித்துள்ளார்.

பசிலின் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும் தீர்ப்பு புதன்கிழமை அறிவிப்பு

Posted by - November 13, 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ   மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையை வேறு ஒரு  நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை (15) அறிவிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (13) அறிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை அடித்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கையின் போது திவிநெகும திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபாவை நஷ்டம் ஏற்படுத்தி பொதுச் சொத்தை

யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

Posted by - November 13, 2017

முப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் 200 பில்லியன் டொலர்களையும் LTTE யினரும் அதே அளவான தொகையை யுத்தத்துக்காக செலவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். யுத்தத்தால் இடம்பெற்ற இழப்பை இலங்கை இன்னும் கணக்கிடவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் இந்த இழப்பை பற்றி சிந்தித்தாவது

இராணுவ ட்ரக் வண்டி விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 13, 2017

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று இன்று பகல் 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 11 பேர் காயங்களுக்குள்ளாகி கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 11 பேரில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். கண்டி பகுதியிலிருந்து பயிற்சிக்காக தியத்தலாவ பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இடது

அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - November 13, 2017

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பல தசாப்தங்களுக்கு முன்னர் வினைத்திறனான, பலமான அரசசேவை நாட்டில் காணப்பட்டதுடன், பிற்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளின் காரணமாக அரச சேவை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் மதிப்பீட்டு செயற்திட்டத்தின் பெறுபேறுகளுக்கமைய நடைபெற்ற தேசிய விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 2015 ஆம்

ரோஹிங்யா அகதிகள் தாக்குதல் – அரம்பேபொல தேரருக்கு பிணை

Posted by - November 13, 2017

சிங்களே ஜாதிக பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தி அவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மங்கள அரச விரோதியாவார் – பிரதிபா மகாநாம

Posted by - November 13, 2017

போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நிதியமைச்சரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றமை இதனூடாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். தெஹிவளை பகுதியில் நடைபெற்ற போதை மருந்து முறைகேடுகளை தடுக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்

கபீர் ஹாஷிமுக்கு சர்வதேச விருது

Posted by - November 13, 2017

பூகோள பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்புக்கு ஆற்றிய சேவை தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாஷீம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த விருது அமைச்சருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி விளக்கமறியலில்

Posted by - November 13, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர் படையின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். நிதி மோசடி விசாரணை தொடர்பில் இவர் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை மாவீரர் குடும்பமே ஏற்ற வேண்டும்!

Posted by - November 13, 2017

இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்றவேண்டுமென மாவீரர்களது குடும்பங்கள் சார்பினில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.