முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை (15) அறிவிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (13) அறிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை அடித்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கையின் போது திவிநெகும திணைக்களத்துக்கு சுமார் 2 கோடி ரூபாவை நஷ்டம் ஏற்படுத்தி பொதுச் சொத்தை மோசடி செய்ததாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கே வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்த் தரப்பினர் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

