சிங்களே ஜாதிக பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தி அவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

