கண்டி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளராக முஹம்மது ஷபீ நியமனம்

Posted by - December 26, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ஷபீ நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதில் தடைகள் ஏற்படலாம் – தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு

Posted by - December 26, 2017

நாளை (27) நாடு பூராகவும் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறையை முறைமைப்படுத்துவதாக அதிகாரிகள் பல தடவைகள் கூறினாலும், அதனை செயற்படுத்தாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையிடலில் இரண்டு வாரங்களில் தீர்வு பெற்றுத்தருவதாகக் கூறிய வாக்குறுதியும் தற்பொழுது மீறப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் கே.ஆர். வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை தீர்க்க அதிகாரிகள் தவறும்

கட்சி செயலாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு-மஹிந்த

Posted by - December 26, 2017

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு நாளை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, நாளை மறுதினம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடாத்துவது தொடர்பான சட்ட விதிகள் மற்றும் தேர்தலின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையிடப்படவுள்ளது.

ராஜகிரிய சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்பாடு

Posted by - December 26, 2017

ராஜகிரிய, வெலிக்கடை சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் மேம்பால நிர்மாண பணிகளுக்காக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பகுதிக்கு வருவது, கொழும்பிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக GMOA எச்சரிக்கை

Posted by - December 26, 2017

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்குள் சம்பளத்துக்கு ஒப்பாக வழங்கப்படவில்லை எனின் தொடர் பணிநிறுத்த போராட்டத்தில் குதிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் தொடர்புடைய வேலைநேர கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என GMOA வின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அதிகாரிகளிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வாரங்களில் குறித்த நாவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லை எனின் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017

யாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….  

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடைய ஓர் அங்கம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………..

தமிழ்பேசும் மக்களுக்காக இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்படாது – அனந்தி

Posted by - December 26, 2017

தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை. மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள

மீண்டும் நீடிக்கப்பட்டது நாகை மீனவர்களின் விளக்கமறியல்!!

Posted by - December 26, 2017

கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று 3ஆவது முறையாக  வழக்கை விசாரித்த நீதிமன்ற பதில்  நீதிவான் சபேஷன் மீனவர்களை எதிர்வரும் எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று வரை 140  தமிழக