சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

Posted by - January 2, 2017

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த யோசனையில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – 16 பேருக்கு தண்டனை

Posted by - January 2, 2017

சீனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் உள்பட 16 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு தேவையான உறுப்புகள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களிடம் இருந்து எடுத்து பொருத்தப்பட்டு வந்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. அதையடுத்து உடல் உறுப்புகள் சட்டப்படி தானமாக பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது. இதனால் மாற்று சிறுநீரகம்

புத்தாண்டில் உலகை அச்சுறுத்திய வடகொரியா

Posted by - January 2, 2017

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை நடத்தவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். இந்த ஏவுகனை பரிசோதனை பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக கிம் ஜொங் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தில் வட கொரியா இரண்டு ஏவுகனை பரிசோதனைகளை நடத்தியிருந்தது. இந்த ஏவுகனை பரிசோதனைகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத நிலையில் மற்றும் ஒரு பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்திக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. வட கொரியாவின் இத்தகைய அணு

அம்பாறையில் மீனவர்களை காணவில்லை

Posted by - January 2, 2017

அம்பாறை கல்முனைக்குடி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இயந்திரப் படகுகளில் சென்ற 6 மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த மீனவர்கள் கடலுக்கு சென்று 8 நாட்களாகியும் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என உறவினர்கள் நேற்று காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குறித்த மீனவர்களை மீட்பது தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - January 2, 2017

சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான குறித்த சந்தேகநபர் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அறிவிப்புக்கு வைகோ, முத்தரசன் கண்டனம்

Posted by - January 2, 2017

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களின் 120 படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் அறிவித்துள்ளமை இந்திய அரசுக்கு விடப்பட்ட சவாலாகும். இலங்கையின் இந்த விபரீதப் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்தா விட்டால், தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாகவே இந்திய அரசு

5-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி

Posted by - January 2, 2017

பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இந்த புதிய ஆண்டில் இருந்து அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன – ரணில்

Posted by - January 2, 2017

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்திலேயே புது வருடம் பிறக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் நாடு என்ற வகையில் நாம் பெறுமதியான பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம். அவ்வாறே ஜனநாயகம் மற்றும் ஒழுக்க நெறிமிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உள்ளன, என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டடை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே

ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே – ஜனாதிபதி

Posted by - January 2, 2017

பொது நன்மை கருதி காலத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலமே எம்மால் உயர்வான இலக்கை அடை முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அநேகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே என்பதை நாம் மறந்து விடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”

Posted by - January 1, 2017

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் திரையிடப்படுகின்றது.ஏனைய நகரங்களிலும் விரைவில் திரையிடப்படும். தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி