மானிறைச்சியுடன் இருவர் கைது

Posted by - January 2, 2017

கந்தளாய் அக்போபுர பகுதியில் மான் இறைச்சி 22 கிலோவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மானை வேட்டையாடி இறைச்சியை கொண்டுச் செல்லும் போது காவல்துறையில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளை இருவர் கைது செய்யப்பட்டனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரும் 31வயது மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

Posted by - January 2, 2017

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சேர்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை

பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 35 பேர் பலி

Posted by - January 2, 2017

ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் ஜனநெரிசலான சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 35 பேர் பலியாகினர். இது தவிர, மேலும் 61 பேர் காயமடைந்துள்ளதாக பாக்தாத் பாதுகாப்பு பிரிவின் மருத்துவ துறையினர் குறிப்பிட்டுள்ளனர். ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வாழும் பிரதேசத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அமைப்பான குழுவினர், இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர். ஷியா குழுவினரை குறி வைத்தே இந்த தாக்குதல் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, அல்-கிண்டி

அபராதம் குறித்து ஆராய்வு – காவல்துறை மா அதிபர்

Posted by - January 2, 2017

7 வகையான போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர் இந்த திட்டம் அமுல் படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். புது வருடத்தை ஒட்டி காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். சட்டத்தை மதித்து செயல்படும் மக்களுக்கு இந்த புதிய அபராத முறை பாதிப்பை ஏற்படாது

பொதுத் தேர்தலில் கூட்டாக போட்டி

Posted by - January 2, 2017

அடுத்த பொதுத் தேர்தலின் போது பொதுமக்கள் முன்னணி, கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னணியின் தலைவர் ஜீ.எஸ் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்நோக்கும் சவால்களை உரிய வகையில் எதிர்கொள்ள தாம் வியூகம் அமைத்து செயற்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது முறையாகவும் நாம் ஏமாறப்போவதில்லை எனவும் ஜீ.எஸ் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் குறித்த அமைச்சு மட்ட பேச்சு வார்த்தை கொழும்பில் இடம்பெற்றது.

Posted by - January 2, 2017

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமான மற்றுமொரு உயர் மட்ட பேச்சு வார்த்தை இன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்திய அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையே அமைச்சு மட்டத்தில் இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. கடந்த டிசம்பர் 31ஆம் திகதி புதுடெல்லியில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது, மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக, இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிறந்தர தீர்வொன்றை காணும் முகமாக

சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டும் – தம்பித்துரை

Posted by - January 2, 2017

ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள சசிகலா நடராஜனுக்கு, தமிழக முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் லோக் சபை உறுப்பினரான எம். தம்பித்துரை இந்த யோசனையை முன்வைத்துள்ளர். மாநில அரச மற்றும் கட்சியின் அதிகாரம் இரண்டாக பிரிந்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவிக்கு மாநில

இஸ்ரேலிய பிரதமர் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, வர்த்தகர்களிடம் இருந்து பெறுமதியான பரிசுகளை பெற்றுக்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். பொது வாழ்வில் உள்ள ஒருவர் இவ்வாறான பரிசுப்பொருட்களை பெறுவது இஸ்ரேலிய சட்டத்திற்கு முரணானது என இஸ்ரேலிய சட்டமா அதிபர் அவிச்சை மண்டில்பிடிட் தெரிவித்துள்ளார். ஆரம்ப விசாரணைகள் மூலம் கிடைக்கப்பட்ட தகவலையடுத்து விசாரணைகளை தொடர சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். இதற்கு ஏற்ற வகையில், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு செல்லும் காவல்துறையினர் அவரின் வாக்குமூலத்தை பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோரல்

Posted by - January 2, 2017

புது வருட தினத்தில் துருக்கி இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். தீவிரவாதிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமது அமைப்பைச் சேர்ந்த ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புதுவருட பிறப்பை கொண்டாடிக் கொண்டிருந்த சுமார் 600 பேரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இரவு விடுதிக்கு வாடகை மகளுர்ந்தொன்றில் சென்ற துப்பாக்கிதாரி பிரதான வாசலின் ஊடாக நுழையும் போது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப்

முன்னாள் போராளிகள் போராட்டம்

Posted by - January 2, 2017

தங்களுக்கான வேலை வாய்ப்புகளை கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துளு;ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தாங்கள் புனர்வாழ்வு பெற்று திரும்பிய நாள்முதல் இன்றுவரையில் நிலையான வேலைவாய்ப்புகள் இன்றியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலேயே தங்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆண்பெண் இருபாலாரும் பங்கபற்றி இருந்தனர்.