பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 35 பேர் பலி

305 0

islamic-state-truck-bomb-kills-at-least-60-people-south-of-baghdadஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் ஜனநெரிசலான சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 35 பேர் பலியாகினர்.

இது தவிர, மேலும் 61 பேர் காயமடைந்துள்ளதாக பாக்தாத் பாதுகாப்பு பிரிவின் மருத்துவ துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வாழும் பிரதேசத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அமைப்பான குழுவினர், இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.

ஷியா குழுவினரை குறி வைத்தே இந்த தாக்குதல் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அல்-கிண்டி மருத்துவ மனைக்கு அருகாமையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் பிறிதொரு கார் குண்டு பின்னர் வெடிக்க வைக்கப்பட்டது.

இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல நேற்று சனிக்கிழமை அங்காடி ஒன்றிற்கு அருகாமையில் இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டனர்.