நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று காலை குறித்த இளைஞன் 11 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் நீரில் மூழ்கி

