தனிநபர் ஒருவரின் மீன் நுகர்வு அதிகரிப்பு!

7183 60

இவ் வருடத்தில் நபரொருவர் நுகரும் மீனின் அளவு அதிகரித்துள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. 

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில், குறித்த அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நபரொருவர் 22 கிலோகிராம் மீனை நுகர்ந்ததாகவும், இவ்வருடம் இது 46 கிலோகிராமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அடுத்த வருடம் இந்தத் தொகையை 50 கிலோகிராமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment